நான் சீட் கேட்டேனா? எதுக்கு கொடுத்தீங்க? எதுக்கு பறிச்சீங்க? சீமானுக்கு நீக்கப்பட்ட வேட்பாளர் கேள்வி


posted by:newstamil
2016-04-01 07:46:44

naam-tamilar-canditete

நாம் தமிழர் கட்சியின் ஆலங்குடித் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த மு.தமிழ்செல்வி கடந்த ஒரு மாதமாக தொகுதி முழுவதும் முதல் சுற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். இரண்டாம் கட்ட வாக்கு சேகரிப்பு பணிகள் பற்றிய ஆலோசனைக் கூட்டத்தை கீரமங்கலத்தில் வியாழக்கிழமை நடத்திக் கொண்டிருந்தபோது சீமான் அறிக்கை வெளியானது.

அதில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடித் தொகுதி மு.தமிழ்ச்செல்வி எனும் தாங்கள், பொறுப்பாளர்களுடன் சரியாகச் செயல்பட்டு பயணிக்க முடியாத காரணத்தாலும், கட்சி பெருங்கனவுகளுடன் நீண்ட பெரும்பயணம் செல்ல வேண்டி இருப்பதாலும், தங்களை வேட்பாளர் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்ததை மிக்க வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்வதோடு அந்தப் பொறுப்பை மீளப் பெற்றுக்கொள்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய மு.தமிழ்செல்வி, நான் நாம் தமிழர் கட்சியில போட்டியிடுறேன்னு உங்ககிட்ட (சீமான்) வந்து விருப்ப மனு கொடுத்தேனா? நீங்களா அறிவி்ச்சீங்க.. அதுக்கு பிறகு கட்சிக்காக இயக்க தோழர்களை ஒன்றிணைத்து தேர்தல் பணிகள் செய்து கொண்டிருந்தபோது.. இன்று நாங்க அடுத்த கட்ட நகர்வு குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்திக்கிட்டு இருக்கும் போது என்கிட்ட எந்த விளக்கமும் கேட்காமலேயே நீக்குறீங்க. எதுக்காக நீக்கினீங்க.. அண்ணன் சீமான் தான் பதில் சொல்லணும் என்றார்.

இந்த நிலையில் தேர்தல் பணிகளுக்காக தொடங்கப்பட்ட முகநூல் வாட்அப் களில் உள்ள முகப்பு பெயர் நாம் தமிழர் என்று இருந்ததை தேசிய தலைவர் என்று மாற்றி விட்டனர்.

தமிழ்செல்வியை சுயேட்சையாக போட்டியிடுமாறு அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

TAG: நாம் தமிழர் கட்சி, தமிழ்செல்வி, சீமான்

உடனடி செய்திகளுக்கு எப்போதும் நியூஸ்தமிழ் வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.