தி.மு.க., 180 இடங்களில் போட்டி; காங்கிரசுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கீடு


posted by:newstamil
2016-04-04 10:47:58

DMK-Congress-seat-sharing-talks-conclude--Congress-to-contest-41-seats

கலைஞரை அவரது கோபாலபுரம் இல்லத்தில் கடந்த வாரம் குலாம் நபி ஆசாத், முகுல் வாஸ்னிக் ஆகியோர் நேரில் சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

காங்கிரஸ் திமுக., கூட்டணியில் இன்று காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டன. மேலும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் , மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட இதர கட்சிகளுக்கு 13 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

திமுக - காங்கிரஸ் கட்சிகள் இடையே தொகுதி உடன்பாடு ஏற்படுவதில் சுணக்கம் ஏற்பட்டது. காங்கிரஸ் 60 தொகுதிகள் கேட்டதாகவும், ஆனால் 41 தொகுதிகள் மட்டுமே் ஒதுக்கப்பட்டுள்ளன. இருப்பினும் இந்த தொகுதி உடன்பாடு மகிழ்ச்சி அளிப்பதாக தமிழக காங்., தேர்தல் பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.

காங். மேலிட பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத், தி.மு.க. தலைவர் கருணாநிதியை சென்னை கோபாலபுரத்தில் இரண்டாவது முறையாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டது.

இதையடுத்து காங். கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் தி.மு.க. 180 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு 54 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது.

இதனைத்தொடர்ந்து எந்தெந்த தொகுதிகளில் யார் யார் போட்டியிடுவது குறித்து இரு கட்சிக் குழுவினரும் முடிவு செய்வார்கள்.

தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு விவரம்:

தி.மு.க. - 180

காங். - 41

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் . - 5

மனிதநேய மக்கள் கட்சி -5

பெருந்தலைவர் மக்கள் கட்சி -1

வசாய தொழிலாளர் கட்சி-1

சமூக சமத்துவ படை கட்சி - 1

TAG: DMK, Congress, தி.மு.க, seat sharing

உடனடி செய்திகளுக்கு எப்போதும் நியூஸ்தமிழ் வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.