உடைகிறது தேமுதிக? - தே.மு.தி.க.வில் பிளவு: 5 எம்.எல்.ஏ.க்கள் திடீர் போர்க்கொடி


posted by:newstamil
2016-04-05 02:59:19

DMDK-5-MLA-Press-Meet

தமிழக சட்டசபை தேர்தலில் திடீர் திருப்பமாக, மக்கள்நல கூட்டணியில் உள்ள தே.மு.தி.க.வில் திடீர் பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இக்கட்சியில் உள்ள எம்.எல்.ஏ., சந்திரகுமார் தலைமையில் 5 எம்.எல்.ஏ.க்கள் உட்பட 10 மாவட்ட செயலாளர்கள் திடீரென கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இவர்கள் மக்கள் நலக்கூட்டணியில் இருந்து தே.மு.தி.க. விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.இதனால் தே.மு.தி.க. கட்சி இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

- அதிமுக ஆட்சிக் காலத்தில் நெருக்கடிக்கு மத்தியில் விஜயகாந்த் விசுவாசியாக இருந்தோம்

- அதிமுக ஆட்சிக் காலத்தில் மிகப் பெரிய பாதிப்புக்குள்ளானது தேமுதிகதான்

- உடைந்தது தேமுதிக- சந்திரகுமார் தலைமையில் மா.செ.க்கள், எம்எல்ஏக்கள் போர்க்கொடி

- தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில் இணைந்ததற்கு எதிர்ப்பு; சந்திரகுமார் உள்ளிட்ட 5 எம்எல்ஏக்கள், போர்க்கொடி

- எங்களின் விசுவாசத்துக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது- சந்திரகுமார்

- தேமுதிக எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் மீது வழக்கு போடப்பட்டு சிறைக்கு போனவர்கள்- சந்திரகுமார்

- தேமுதிகவில் 95% பேர் திமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர்- சந்திரகுமார்

- மக்கள் நலக் கூட்டணியோடு கட்சி நிர்வாகிகளை கலந்து ஆலோசிக்காமல் கூட்டணி

- திமுகவுடன் பேசுவதாக கூறிவிட்டு கடைசிநேரத்தில் திடீரென மக்கள் நலக் கூட்டணியுடன் விஜயகாந்த் கூட்டணி

- விஜயகாந்த் முடிவால் ஜெ. மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடுவாரோ என்ற நிலை ஏற்பட்டுள்ளது

- ஜெயலலிதாவுக்கு ஆதரவான நிலையை விஜயகாந்த் எடுத்ததாக தோற்றம் உருவாகிவிட்டது: சந்திரகுமார்

யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் திமுக தான் ஆட்சியை பிடிக்கும்

TAG: தே.மு.தி.க, DMDK, MNK, Makal Nala Kutani, தேமுதிக, DMDK 5 MLA Press Meet

உடனடி செய்திகளுக்கு எப்போதும் நியூஸ்தமிழ் வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.