பிரேமலதாவால் அதலபாதாளத்திற்கு தேமுதிக சென்றுவிட்டது - சந்திரகுமார்


posted by:newstamil
2016-04-06 03:22:37

chandrakumar-slams-premalatha-vijayakanth

தேமுதிகவில் இருந்து நீக்கப்பட்ட சந்திரகுமார் தலைமையிலான அணியினர் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

விஜயகாந்த் மனைவி பிரேமலதாவால் தேமுதிக அதலபாதாளத்திற்கு சென்றதாக அக்கட்சியிலிருந்து அதிருப்திடைந்துள்ள சந்திரக்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக எம்எல்ஏ சந்திரகுமார், திமுகவுடன் கூட்டணி வைக்கவேண்டும் என்று கூறியதற்காக தங்களை நீக்கியதை ஏற்க முடியாது என தெரிவித்தார்.

மக்கள் நலக்கூட்டணியுடன் போட்டியிட விரும்பாமல் நிர்வாகிகள் பலர் பணத்தை திரும்ப பெற்றதாகவும் சந்திரகுமார் குறிப்பிட்டார்.

தங்களை கட்சியில் இருந்து நீக்கியது செல்லாது என தெரிவித்த சந்திரகுமார், 23 பேர் கொண்ட ஒழுங்கு நடவடிக்கை குழு மூலமே கட்சியில் இருந்து தங்களை நீக்க முடியும் என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய சந்திரகுமார், தே.மு.தி.க.வில் கருத்து சுதந்திரம் இல்லை என்றும் குறிப்பிட்டார். விஜயகாந்தின் கட்டுப்பாட்டில் கட்சி இல்லை என்று கூறிய சந்திரகுமார், பிரேமலதாவின் கட்டுப்பாட்டில் தான் கட்சி உள்ளதாகவும் தெரிவித்தார்.

திமுகவில் இருந்து பணம் வாங்கிக்கொண்டு இந்த முடிவை எடுத்ததாக வெளியான தகவல் பற்றி விளக்கமளித்த சந்திரகுமார், 1992ல் திமுகவில் இருந்து வெளியேறிய போது வைகோ, அதிமுகவிடம் பணம் வாங்கியதாக ஒப்புக்கொண்டால் தானும் ஒப்புக்கொள்வதாகவும் சந்திரகுமார் தெரிவித்தார்.

கட்சிக்காக தனது சொந்த வாழ்க்கையையும் குடும்பதையும் இழந்துள்ளதாக பேட்டியின் போது சந்திரகுமார் உருக்கமாக தெரிவித்தார்.

இன்று சவால் விட்டு சொல்கிறேன். இந்த கூட்டணியோடு (ம.ந.கூ.) சேர்ந்திருக்கிறார் கேப்டன். 10 ஆயிரம் வாக்குகளுக்கு மேலே ஒரு தொகுதிலே பெற முடியாது. 10 ஆயிரம் வாக்குகள் பெறுவதற்கு ஒவ்வொரு வேட்பாளரையும் 25 லட்சம் செலவுசெய்ய வைக்கிறீர்களே. உங்கள் வீட்டு பிள்ளையாக இருந்தால் இப்படி அவர்களை பலிகொடுப்பீர்களா. அதற்கு அவர்கள் பதில் சொல்லட்டும். இவ்வாறு கூறினார்.

TAG: Premalatha Vijayakanth, Vijayakanth, Chandrakumar slams

உடனடி செய்திகளுக்கு எப்போதும் நியூஸ்தமிழ் வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.