ஜெயலலிதாவின் கூட்டத்தில் சுருண்டு விழுந்து ஒருவர் பலி


posted by:newstamil
2016-04-20 04:57:32

jayalalitha-campaign

ஜெயலலிதாவின் சேலம் மகுடஞ்சாவடி கூட்டத்தில் வெயில் தாங்க முடியாமல் ஒருவர் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.

மாலை 4 மணிக்கு நடைபெறும் ஜெயலலிதாவின் இந்த பொதுக்கூட்டத்திற்காக காலை 11 மணிக்கே பொதுமக்கள் அழைத்துவரப்பட்டு தடுப்புகளுக்குள் அடைக்கப்பட்டனர். கடும் வெயிலில் நெடு நேரம் இருந்ததால் பச்சையப்பன் என்பவர் சுருண்டு விழுந்தார். அவரை மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

சேலத்தில் 104 டிகிரி வெயில் கொளுத்திவருகிறது. இந்த வெயிலில் மக்கள் நா வரண்டு தவித்தனர். அப்போது பச்சையப்பன் தண்ணீர் குடிக்கு வெளியே எழுந்து சென்றபோது போலீசார் அவரை பாதுகாப்பு காரணம் கருதி தடுத்தனர். இதனால் அவர் மீண்டும் வெயிலில் வாடி சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளார்.

TAG: ஜெயலலிதா, Jayalalitha, election 2016

உடனடி செய்திகளுக்கு எப்போதும் நியூஸ்தமிழ் வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.