கார்த்திக் சுப்புராஜ் கதைக்கு நோ சொன்ன அஜித்


posted by:newstamil
2016-01-06 06:05:50

Karthik-Subbaraj-Script-Developed-For-Ajith

வேதாளம் படத்துக்கு பிறகு முழங்கால் அறுவை சிகிச்சை நடந்து ஓய்வுவில் இருக்கும் அஜித் ஏப்ரல் மாதம் தன் அடுத்த படத்தின் படபிடிப்பில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளார்.

இந்த படத்தை சிவா இயக்க சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிகிறார்கள். இதற்கிடையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பீட்சா படத்தின் மூலம் புகழ்பெற்றவர். படம் எடுப்பதற்காக பல வருடமாக உதவி இயக்குனராக யாரிடமும் காத்துக்கிடந்தவர் இல்லை இவர். நேரடியாக இயக்குனராகி முதல் படமே சூப்பர் ஹிட் கொடுத்தவர். மேலும் இவரின் இரண்டாவது படமான ஜிகர்தண்டா தேசியவிருது வென்றது.

இவர் சமீபத்தில் நடிகர் அஜித்திடம் கதை சொல்லியுள்ளார். ஆனால் அஜித் கதை கேட்டபின் இதில் நடிக்க மறுத்துள்ளார். சமீப காலமாக மாஸ் கதைகளுக்கு அதிக முக்கியதுவம் கொடுத்து நடித்து வருகின்றார் அஜித். ஆனால், கார்த்திக் சுப்புராஜ் திரைக்கதையை மிகவும் எதார்த்தமாக காட்சியமைக்க கூடியவர்.

இதனால் கதையில் அஜித்திற்கு மாஸ் இல்லாமல் இருந்திருக்கலாம். அதனால் அவர் நடிக்க மறுத்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே கதையில் இயக்குனர் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

TAG: Ajith, அஜித், Karthik Subbaraj, கார்த்திக் சுப்புராஜ்

உடனடி செய்திகளுக்கு எப்போதும் நியூஸ்தமிழ் வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.