சிவகார்த்திகேயன் கலாய்ப்பு எல்லை மீறிவிட்டது: லட்சுமி ராமகிருஷ்ணன் ஆவேசம்


posted by:newstamil
2016-01-17 01:15:09

Lakshmy-Ramakrishnan-hits-back-at-Sivakarthikeyan

சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள படம் ‘ரஜினி முருகன்’. இதில் சூரி, கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பொன்ராம் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் இடம்பெற்ற ‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’ பாடல் மிகவும் பிரபலம் அடைந்துள்ளது.

‘ரஜினி முருகன்’ படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டுள்ளார்.

அதில் ‘என்னம்மா’ பாடல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டப் போது “அப்பாடல் ‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’ என்று கலாய்க்கப்பட்ட நிகழ்ச்சியில் இருந்து எடுக்கப்பட்டது” என்று பதிலளித்திருக்கிறார்.

சிவகார்த்திகேயனின் இந்த பதிலுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் தனது சமூக வலைதள பக்கத்தில், “என்னம்மா பாடல் கலாய்ப்பு நிகழ்ச்சியில் இருந்து எடுக்கப்பட்டது என்றும், உண்மையான வசனத்துக்கு சம்பந்தமில்லை என்றும் சிவகார்த்திகேயன் விளக்கம் அளித்துள்ளார். அப்படி என்றால் கலாய்ப்பு நிகழ்ச்சி ஒரு சிறந்த நிகழ்ச்சியா?

சிவகார்த்திகேயனின் கலாய்ப்பு எல்லை மீறி போய்விட்டது. இதனால் நான் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். வணிக ரீதிக்காக உபயோகப்படுத்தி விட்டு அதற்கு காரணம் என்னைக் கலாய்த்தவர்களுக்கு கிரெடிட் தருவது என்பது எந்த விதத்தில் நியாயம்?

‘என்னம்மா’ பாடலுக்கு நான் தான் காரணம் என்று சொன்னால் நான் பணம் கேட்டு விடுவேனா?. கவலை வேண்டாம் சிவகார்த்திகேயன், இதை விட எனக்கு உருப்படியான நிறைய வேலைகள் இருக்கின்றன” என்று காட்டமாக தெரிவித்திருக்கிறார்.

TAG: சிவகார்த்திகேயன், லட்சுமி ராமகிருஷ்ணன், Lakshmy Ramakrishnan, Sivakarthikeyan

உடனடி செய்திகளுக்கு எப்போதும் நியூஸ்தமிழ் வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.