சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் நடிக்க ஆசை - த்ரிஷா


posted by:newstamil
2016-01-30 01:27:18

I-like-to-share-screen-with-Super-star-rajinikanth

த்ரிஷா சினிமாவுக்கு வந்து கிட்டத்தட்ட பத்து வருடங்கள் மேல் ஆகிறது இவர் தமிழ் தெலுங்கிலும் ஒரு காலத்தில் நம்பர் 1 ஆக இருந்தவர் சமீபத்தில் படங்கள் அவளவாக இல்லை இதனால் என்னமோ ஆரண்மனை 2 இதுவரை காமிக்காத கவர்ச்சியை அள்ளி வீசியுள்ளார். இப்போது அவருக்கு புது ஆசை.

இதையொட்டி திரிஷா டுவிட்டரில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

கல்லூரி காலத்தில் உங்கள் செல்லப் பெயர் என்ன என்ற கேள்விக்கு, ‘கல்லூரியில் நான் படித்த போது எனது செல்லப் பெயர் திரிஷா தி டெரர்’ என்றார். யாருடன் நடிக்க ஆசை என்று கேட்ட போது, ‘ரஜினியுடன்’ என்று கூறினார்.

சிவகார்த்திகேயனுடன் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டீர்களாமே என்ற ஒரு ரசிகரின் கேள்விக்கு, ‘அப்படி எல்லாம் இல்லை. அவருடன் நடிக்க எனக்கும் விருப்பம்தான்’ என்று பதில் அளித்தார்.

திரிஷாவின் இந்த பதிலை அறிந்த சிவகார்த்திகேயன், தனது டுவிட்டர் பக்கத்தில் திரிஷாவுக்கு நன்றி கூறி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

TAG: rajinikanth, த்ரிஷா, Trisha, ரஜினி, Trisha Interview

உடனடி செய்திகளுக்கு எப்போதும் நியூஸ்தமிழ் வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.