கிரிக்கெட் டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா


posted by:newstamil
2015-12-07 10:00:46

historic-victory-for-India-against-South-Africa

டெல்லியில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா 337 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று தொடரை 3-0 என்று கைப்பற்றியது.

இந்தி்யா வந்துள்ள தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி டுவென்டி 20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களை கைப்பற்றியிருந்த நிலையில், டெஸ்ட் தொடரில் பங்கேற்றது.

மொகாலியில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட பெங்களூருவில் நடைபெற்றது. முதல் நாள் ஆட்டம் மட்டும் நடைபெற்றிருந்த நிலையில், மழையின் காரணமாக எஞ்சிய 4 நாட்கள் ஆட்டமும் தடைபட்டது. இதனையடுத்து, 2வது டெஸ்ட் டிராவில் முடிந்தது.

நாக்பூரில் நடந்த மூன்றாவது டெஸ்டிலும், எளிதில் வெற்றிக் கனியை பறித்த இந்தியா, டில்லியில் நடந்த நான்காவது டெஸ்டிலும் வெற்றி பெற்று 3 - 0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது.

ஆட்ட நாயகனாக இரு இன்னிங்ஸ் சத நாயகன் ரஹானே தேர்வு செய்யப்பட அஸ்வின் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த டெஸ்ட் தொடரை, இந்திய அணி வென்றுள்ளதன் மூலம், டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இந்தியா 2ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

TAG:

உடனடி செய்திகளுக்கு எப்போதும் நியூஸ்தமிழ் வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.