'இதற்கு முன் பெறாத மிகப்பெரிய வெற்றியை, பெற வேண்டும்': ஜெயலலிதா கட்டளை


posted by:newstamil
2016-03-31 22:05:30

Jayalalitha-image

'இதற்கு முன் பெறாத மிகப்பெரிய வெற்றியை, இந்த தேர்தலில், அ.தி.மு.க., பெற வேண்டும்' என, கட்சி தொண்டர்களுக்கு, பொதுச்செயலர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார்.

அதில், ஜெயலலிதா கூறியிருப்பதாவது:

அ.தி.மு.க., தொடர்ந்து பல்வேறு அரசியல் வெற்றிகளை குவிக்க வேண்டிய பெரும் பொறுப்பு, நமக்கு இருக்கிறது. சட்டசபை தேர்தலில், இதற்கு முன்பெற்ற வெற்றிகளைக் காட்டிலும், பெரிய வெற்றியை, அ.தி.மு.க., பெற்றாக வேண்டும். அதுவே, எம்.ஜி.ஆருக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன் என்பதை, கட்சியினர் உணர்ந்து, சூளுரை ஏற்கும் தருணமாக அமைய வேண்டும்.

அரசு துறைதோறும் செய்துள்ள மக்கள் நலப்பணிகளை, மக்களுக்கு எடுத்து சொல்லுங்கள். அனைவரும் மகிழும் வண்ணம், மக்களுக்கு தொண்டாற்றுங்கள். பொறுப்புகளில் உள்ளவர்களும், தொண்டர்களும், தங்கள் பணிகளை, நேர்மையாகவும், திறமையாகவும் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

TAG:

உடனடி செய்திகளுக்கு எப்போதும் நியூஸ்தமிழ் வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.